சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்...!
Sri Lanka
Death
By Pavi
முன்னாள் சபாநாயகரும் முன்னாள் அமைச்சருமான சமல் ராஜபக்சவின் மனைவி சந்திர மாலினி ராஜபக்ச காலமானார்.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காலமான சந்திர மாலினி ராஜபக்ச, முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சஷீந்திர ராஜபக்சவின் தாயாரும் ஆவார்.
மூத்த அரசியல்வாதி
சமல் ராஜபக்ச, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவும் பல்வேறு அமைச்சுப் பதவிகளையும் வகித்துள்ள மூத்த அரசியல்வாதியாவார்.

இந்நிலையில், சந்திர மாலினி ராஜபக்சவின் இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்