திவுலபிட்டிய தேங்காய் நார் தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து
Gampaha
Sri Lanka
Fire
By Sindu
கம்பஹா, திவுலபிட்டிய, வெவகெதரவில் உள்ள தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுக்குள் கொண்டுவர, தீயணைப்புத் துறை நான்கு தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு அனுப்பியுள்ளது.
தீயணைப்புப் பணிகளுக்கு உதவுவதற்காக, கம்பஹா தீயணைப்புப் பிரிவிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்களும், நீர்கொழும்பு தீயணைப்புப் பிரிவிலிருந்து ஒரு வாகனமும் அனுப்பப்பட்டுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

தீயணைப்பு வீரர்கள், அப்பகுதி மக்களுடன் இணைந்து, தற்போது தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்