மட்டக்களப்பில் ஒருவரின் உயிரைப் பறித்த விபத்து
மட்டக்களப்பு,கிரான், தொப்பிக்கலை வீதியில் இராணுவ ட்ரக்வண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (15) காலை 8.00 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது இராணுவ ட்ரக் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலம் வைத்தியசாலையில்
குறித்த நபர் சம்பவ தினமான இன்று காலை 8.00 மணியளவில் கிரானில் இருந்து தொப்பிக்கலை நோக்கி பயணித்த போது பிரதேச செயலகத்துக்கு அருகாமையிலுள்ள வீதி வளைவை அண்மித்த பகுதியில் தொப்பிக்கலையில் இருந்து கிரான் நோக்கி பிரயாணித்த இராணுவ ட்ரக் வண்டியும் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து உயிரிழந்தவரின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |