யாழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 74 தமிழக கடற்தொழிலாளர்கள்
இலங்கை (Sri Lanka) கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 74 தமிழக (Tamil Nadu) கடற்தொழிலாளர்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கால கட்டங்களில் கைதாகி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட இவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அவர்களில் 64 பேரின் வழக்குகள் நாளை மறுதினம் (30) செவ்வாய்க்கிழமை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
கடந்த ஜூலை முதலாம் திகதி 25 கடற்றொழிலாளர்களும், ஜூலை 16 ஆம் திகதி நான்கு கடற்றொழிலாளர்களும், ஜூலை 11ஆம் திகதி 13 கடற்றொழிலாளர்களும் மற்றும் ஜூலை 22ஆம் திகதி 22 கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனடிப்படையில், கைதாகியுள்ள 64 கடற்தொழிலாளர்களின் வழக்கு விசாரணைகளே எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |