பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில்(sri lanka) 75% பாடசாலை மாணவர்கள் தங்கள் பிரச்சினைகள் குறித்து பேச யாரும் இல்லை என உணர்வதாகவும் எனவே அவர்களிடையே கடுமையான மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு ஏற்படும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சின் மனநல இயக்குநரகத்தின் பணிப்பாளர், சிறப்பு மருத்துவர் லக்மினி மகோதரத்ன.
கொழும்பில் உள்ள சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (ஓகஸ்ட் 6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.இது தெடார்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
பல்வேறு வகையில் மன அழுத்தம்
22.4% மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்படுவதாகவும், 11.9% மாணவர்களுக்கு இரவில் சரியான தூக்கம் கிடைப்பதில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.
சுமார் 18% மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும், 7.5% மாணவர்கள் நெருங்கிய நண்பர்கள் இல்லாததால் அவதிப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தப்படுவதாக உணரும் பிள்ளைகள்
இந்த நாட்டில் 25% பிள்ளைகளுக்கு ஒரு பிரச்சனை இருக்கும்போது பேச யாராவது இருக்கிறார்கள், ஆனால் சுமார் 75% பிள்ளைகள் தங்களுக்கு ஒரு ஒரு பிரச்சனை அல்லது ஒரு காயம் ஏற்படும்போது தங்கள் சோகத்தையோ துக்கத்தையோ வெளிப்படுத்த யாரும் இல்லாததால் தனிமைப்படுத்தப்படுவதாக உணர்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
