கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஏற்பட்ட நிலை:நோயாளர்கள் பெரும் அவதி
தொண்டை முதல் வயிறு வரையிலான நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் (எண்டோஸ்கோபி) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உள்ள 10 இயந்திரங்களில் எட்டு இயந்திரங்கள் தற்போது செயலிழந்துள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் இருந்து வரும் நோயாளர்களின் பரிசோதனையும் இந்த இயந்திரங்களை பயன்படுத்தியே மேற்கொள்ளப்படுவதாகவும், நோயாளர்கள் பரீட்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் தாதி உத்தியோகத்தர் எஸ். பி. மடிவத்த தெரிவித்தார்.
நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டவை
இந்த இயந்திரங்கள் தொண்டையில் இருந்து வயிற்றில் ஏற்படும் காயங்கள், புற்றுநோய் நிலைகள் மற்றும் பல்வேறு வகையான கட்டிகளைக் கண்டறிந்து, நோய் பரிசோதனைக்கான மாதிரிகளைப் பெறுதல் மற்றும் சில நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டவை என்று அவர் கூறினார்.
அதிகளவான நோயாளர்கள் வருகை
இந்த இயந்திரங்கள் பிரதான வைத்தியசாலைகளில் மாத்திரம் இருப்பதாகவும், இந்த பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அதிகளவான நோயாளர்கள் வருகை தருவதாகவும், எனவே வைத்தியசாலையில் இயங்காத இயந்திரங்களை அகற்றி புதிய இயந்திரங்களை வழங்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |