கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்கள் விடுதலை
கத்தாரில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அவர்களில் ஏழு பேர் தற்போது நாடு திரும்பியுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் நேற்று(12)தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியுறவு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஹ்ரா குளோபல் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்களை கத்தார் அரசு விடுதலை செய்திருப்பதை இந்தியா வரவேற்கிறது. அவர்களில் ஏழு பேர் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளனர்.இந்தியர்களின் விடுதலையையும் அவர்களை நாட்டுக்கு அனுப்பிய முடிவையும் எடுத்ததற்கு கத்தார் மன்னரைப் பாராட்டுகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
மரண தண்டனை
தோஹாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.
அதனை தொடர்ந்து அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி மரண தண்டனை விதித்தது.
வெளியுறவுத் துறை
மேலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர்களை மீட்க இந்தியா அனைத்துவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |