மியன்மார் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட 8 இலங்கையர்கள்
மியன்மார் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இணையக் குற்றங்கள் வலயத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் குழுவொன்று மீட்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 56 இலங்கையர்களில் 08 பேர் இன்று காலை மியன்மார் பாதுகாப்பு படையினரின் தலையீட்டினால் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த குழுவினர் தற்போது மியாவடி காவல்துறையினரின் பாதுகாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏனையவர்களை மீட்பதற்கு நடவடிக்கை
இதேவேளை ஏனையவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த டிசம்பரில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இலாபகரமான வேலை வாய்ப்புகள் என்ற பொய்யான தகவலின் அடிப்படையில் சுற்றுலா விசா மூலம் ஈர்க்கப்பட்ட இலங்கையர்களின் குழு தாய்லாந்து எல்லை வழியாக மியன்மாருக்கு கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த தொழிலாளர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவு செய்யாமல் மியன்மாருக்கு பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |