காசாவில் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அவுஸ்திரேலிய, மலேசிய தலைவர்கள் அழைப்பு
இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் காரணமாக உருவாகியுள்ள பிராந்திய பதற்றங்களை தணிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய மற்றும் மலேசிய தலைவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
மெல்பேர்னில் இடம்பெறும் விசேட ஆசியான் மாநாட்டின் போது இருவரும் சந்தித்துக் கொண்டவேளை இந்த கருத்தினை வெளியிட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிசும் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் இணைந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
காசாவில் உள்ள பணயக் கைதிகளின் விடுதலை
இதேவேளை காசாவில் உள்ள அனைத்து பணயக் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதன்போது இஸ்ரேலிற்கும் பலஸ்தீனத்திற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்து பேசவிரும்பவில்லை மாறாக பொது உடன்பாடு காணப்படும் உடனடி யுத்த நிறுத்தம் குறித்து பேசவிரும்புகின்றேன் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டின் இறுதியில் காசா குறித்த அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன எனினும் மலேசியாவும் ஹமாசும் கடுமையான நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளன.
காசாவில் காணப்படும் மோசமான நிலை
எனினும் பிலிப்பைன்ஸ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகியநாடுகள் வேறுபட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளன.
இதேவேளை ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் காணப்படும் மோசமான மனிதாபிமான நிலை குறித்து அவுஸ்திரேலிய மலேசிய தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இஸ்ரேல் மீதான தாக்குதலை கண்டிக்காத அவர்கள் உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
அத்துடன் காசாவிற்கான பாதுகாப்பான தடையற்ற தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |