மடகாஸ்கர் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள்! 50 நாட்களாக உணவு இன்றி வாழும் அவலம்
சர்வதேச கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை கடற்றொழிலாளர்கள் 50 நாட்களாக உணவு அல்லது மருத்துவ சிகிச்சை இல்லாமல் மடகாஸ்கர் சிறையில் அவதிப்படுவதாக தென்னிலங்கையின் அச்சு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், CHW 899 என்ற எண் கொண்ட W.P. குமார என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 'ரூத் பாபா VI” என்ற படகில் 2025 ஏப்ரல் 5 ஆம் திகதி வென்னப்புவ துறைமுகத்திலிருந்து கடலக்கு சென்றுள்ளனர்.
இதன்போது சர்வதேச கடற் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஜூன் 2 ஆம் திகதி மடகாஸ்கர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
மடகாஸ்கர் அரசாங்கம்
எட்டு பேர் கொண்ட தங்கள் மீன்பிடிக் குழுவை மடகாஸ்கர் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும், அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூத் பாபா VI படகின் கேப்படன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், "எங்கள் படகில் 8 பேர் உள்ளனர். இந்த நாட்டில் நாங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளோம்.
எங்களுக்கு உணவு அல்லது பானம் வழங்கப்படவில்லை. அங்கு இருப்பவர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளனர்.
ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டுள்ளார். மற்றவர்களுக்கு காயங்கள் உள்ளன. சிலரின் கைகால்கள் மட்டுமல்ல, குடல்களும் அழுகி வருகின்றன. அவர்கள் உள்ளே இருக்கும் நோய்களுக்கு மருந்து கொடுப்பதில்லை." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்றொழிலாளர்
மேலும் இந்த சம்பவம் தொடர்பில், குறித்த அச்சு ஊடகம் மடகாஸ்கர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் இது தொடர்பில் வினவிய போது, கைது செய்யப்பட கடற்றொழிலாளர்கள் 16 டன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாகப் பிடித்ததன் காரணமாக கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
செல்லுபடியாகும் மீன்பிடி உரிமம் இல்லாமல் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் 08 பேர் தொடர்பில் விசாரிக்க மடகாஸ்கர் அரசாங்கத்தைத் தொடர்புகொள்வதில் சிக்கல் இருப்பதாக வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
