8 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழப்பு
Sri Lankan Peoples
Colombo Hospital
By Kiruththikan
நாரம்மல, தங்கொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 8 வயது சிறுமி ஒருவர் ஜம்பு பழம் தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி மூன்று பெண் பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய மகளாவார்.
வாரியபொல ஹம்மாலிய பிரதேசத்தில் உள்ள தனது தாத்தாவை பார்க்க தனது தாயுடன் வந்திருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
பல குழந்தைகளுடன் முற்றத்தில் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குழந்தையின் தொண்டையில் ஜம்பு பழம் சிக்கியதாக குழந்தையின் தாத்தா தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது குழந்தை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி