சீனாவில் கடும் புயல் : 50 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவர்கள் வெளியில் வர தடை
சீனாவில் (China) புயல் காரணமாக 50 கிலோவுக்கு கீழான எடை கொண்டோர் வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தலைநகர் பீஜிங் மற்றும் வடக்கு பிராந்தியத்தை கடுமையான புயல் தாக்கியது.
மங்கோலியாவில் இருந்து சீனா நோக்கி நகர்ந்த அந்த புயலால் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமான சேவைகள் இரத்து
கடும் வேகத்தில் காற்று வீசுவதன் காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு 800க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளதுடன் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 50 கிலோவுக்கும் குறைவான எடைகொண்டவர்கள் காற்றில் அடித்துச் செல்லப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற வானிலை காரணமாக சீனாவிலுள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த இடங்கள் மற்றும் சுற்றுலாத் தளங்களை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடருந்து மற்றும் வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, சீனாவிற்கு சுற்றுலா சென்றிருந்த பயணிகள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
