இலங்கையில் விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில்(sri lanka) அரச வைத்தியசாலைகளுக்கு சுமார் எண்ணூறு விசேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக அரச விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலைமையினால் எதிர்காலத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மயக்க மருந்து நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு
இதனிடையே மயக்க மருந்து நிபுணர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2025ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு 3,500 வைத்திய நிபுணர்கள் தேவை என சுகாதார அமைச்சு தீர்மானித்த போதிலும், வெற்றிடங்களை நிரப்புவதற்கு நிபுணர்கள் இல்லை என அரச விசேட நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டது.
வெளிநாடுகளில் பயிற்சி
விசேட வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி பெற்று திரும்பாதமையே விசேட வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறைக்கு பிரதான காரணமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட வைத்தியர்களாக பயிற்றுவிப்பதற்கு வைத்தியர்கள் ஆர்வம் காட்டாததும் இந்த நிலைமைக்கு காரணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |