ட்ரம்பின் அமெரிக்க குடியுரிமை மாற்ற சட்டம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

Donald Trump United States of America World
By Shalini Balachandran Jun 28, 2025 11:55 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பிறப்பின் அடிப்படையில் அமெரிக்க (America) குடியுரிமை பெறுவதில் மாற்றம் செய்து ட்ரம்ப் (Donald Trump) கையொப்பமிட்ட நிா்வாக உத்தரவுக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

அமெரிக்காவில் பிறந்த எவரும் அந்நாட்டு குடிமகன் என்பதற்கு அமெரிக்காவின் பிறப்புரிமை குடியுரிமை உத்தரவாதம் அளிக்கின்றது.

இந்தக் குடியுரிமை என்பது அமெரிக்க அரசமைப்புச் சட்டத்தின் 14 ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது.

மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர்

மாயமான 400 கிலோ யுரேனியம்: ஈரானின் அடுத்த திட்டம் - நிபுணர்கள் கணிப்பில் பகீர்

சட்ட ஆவணங்கள்

இது பிற நாடுகளில் இருந்து உரிய சட்ட ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவா்களுக்கும், தற்காலிகமாக அமெரிக்கா சென்றவா்களுக்கும் அந்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெற வழிவகுத்துள்ளது.

இவ்வாறு குடியுரிமை பெறுவதில் மாற்றங்களை செய்யும் நிா்வாக உத்தரவில் கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையொப்பமிட்டாா்.

ட்ரம்பின் அமெரிக்க குடியுரிமை மாற்ற சட்டம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Supreme Court Upholds Trump Birthright Citizenship

இந்தநிலையில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோா் அந்நாட்டில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இருந்தாலோ அல்லது தற்காலிகமாக தங்கியிருந்தாலோ, அந்தக் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமையை வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவு அமெரிக்க அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று பல்வேறு தரப்பினா் எதிா்ப்புத் தெரிவித்த நிலையில், இதுதொடா்பான வழக்குகளை விசாரித்த அந்நாட்டு விசாரணை நீதிமன்றங்கள், அந்த உத்தரவை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த தடை விதித்தன.

வெளிநாடொன்றின் 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்

வெளிநாடொன்றின் 21 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: அச்சத்தில் மக்கள்

மனுக்கள் தாக்கல் 

இந்தத் தடைக்கு எதிராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுக்களை விசாரித்த ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமா்வில் ஆறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பை அறிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், “நீதிமன்றத்தை அணுகுபவா்களுக்கான உத்தரவை மட்டுமே விசாரணை நீதிமன்றங்கள் பிறப்பிக்க முடியும் ஆனால், அனைவருக்கும் உத்தரவு பிறப்பித்து தங்கள் அதிகார வரம்பை தாண்டி அந்த நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுகின்றனா்.

ட்ரம்பின் அமெரிக்க குடியுரிமை மாற்ற சட்டம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Supreme Court Upholds Trump Birthright Citizenship

ஒரு சட்டத்துக்கு நாடு முழுவதும் விசாரணை நீதிமன்றங்கள் தடை விதிக்க முடியாது அதற்கான அதிகாரத்தை விசாரணை நீதிமன்றங்களுக்கு நாடாளுமன்றம் வழங்கவில்லை” என தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, மூன்று நீதிபதிகள் மாறுபட்ட தீா்ப்பை அளித்த நிலையில், பெரும்பான்மை நீதிபதிகளின் தீா்ப்பு ஏற்கப்பட்டது.

ரஷ்யாவில் கொடூரமாக தாக்கப்பட்ட ஈரானிய சிறுவன்: உயிருக்கு போராடும் பரிதாப நிலை

ரஷ்யாவில் கொடூரமாக தாக்கப்பட்ட ஈரானிய சிறுவன்: உயிருக்கு போராடும் பரிதாப நிலை

ட்ரம்ப்பின் உத்தரவு 

இருப்பினும், ட்ரம்ப்பின் உத்தரவை 30 நாள்களுக்கு நிறுத்திவைத்த உச்சநீதிமன்றம், அதற்குள் தங்கள் உத்தரவில் திருத்தம் மேற்கொள்ளவோ அல்லது சட்ட ரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கவோ விசாரணை நீதிமன்றங்களுக்கு அவகாசம் அளித்தது.

உத்தரவு சட்டப்படி செல்லுபடியாகுமா மற்றும் அமெரிக்க குடியுரிமை கிடைப்பதில் ட்ரம்ப் செய்த மாற்றம் அரசமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ட்ரம்பின் அமெரிக்க குடியுரிமை மாற்ற சட்டம்: உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு | Supreme Court Upholds Trump Birthright Citizenship

அதுதொடா்பான வழக்கு நடைமுறைகள் குறித்த தீா்ப்பை மட்டுமே உச்சநீதிமன்றம் அளித்தது.

எனவே, ட்ரம்ப்பின் உத்தரவுக்கு தற்போது தடை இருந்தாலும் நீதிமன்றங்கள் மீண்டும் தலையிடாவிட்டால், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்ததுவதற்கான வழி தெளிவாகியுள்ளதாகவும் ஆனால், அதுதொடா்பான வழக்குகள் நீண்ட காலம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பிரிவினை ஆயுதம்: மேற்கத்திய நாடுகள் மீது புடின் வைத்த அதிரடி குற்றச்சாட்டு

பிரிவினை ஆயுதம்: மேற்கத்திய நாடுகள் மீது புடின் வைத்த அதிரடி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025