இலங்கையில் 8 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, 2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு 840,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இதன்படி, ஜனவரி 1 முதல் ஏப்ரல் 22 வரை நாட்டிற்கு 840,411 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டிற்கு வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியப் பிரஜைகளாவர். ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரை இந்தியாவிலிருந்து 176,465 பயணிகள் வருகை தந்துள்ளனர்.
99,777 சுற்றுலாப் பயணிகள்
பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளனர்.

மேலும், ஏப்ரல் 1 முதல் 22 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் 99,777 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தத் தரவுகளைக் கவனிக்கும்போது, முந்தைய மாதங்களுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்