சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வீழ்ச்சி
Silver
Gold
World
By Sathangani
சர்வதேச சந்தையில் இன்று (25) தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முன்னதாக, மத்திய கிழக்கு போர் ஆரம்பமான காலப்பகுதியில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,000 டொலரை கடந்திருந்தது.
எனினும், தற்போது ஒரு அவுண்ஸ் தங்கம் 4,708 அமெரிக்க டொலருக்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி 75.69 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் இன்று இலங்கையிலும் தங்கவிலை வீழ்ச்சியை பதிவு செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இலங்கையிலும் நேற்று (24) தங்கவிலை 2,000 ரூபாயால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 394,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 362,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி