86 வயதில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனை படைத்த நபர்!
பிரித்தானியாவை சேர்ந்த பிரையன் வின்ஸ்லோ (Brian Winslow) எனப்படுபவர் பளுதூக்கி தேசிய அளவிலும் சர்வதேச ரீதியிலும் சாதனை படைத்துள்ளார்.
86 வயதில் அவரின் சாதனை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
75 கிலோ எடை மற்றும் 77.5 கிலோ எடையினை தூக்கி 2 சாதனைகளை ஒரே நாளில் நிகழ்த்தியுள்ளார்.
சாதனை
பிரையன் வின்ஸ்லோ பிரிட்டனில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் இம்மாதம் கலந்துகொண்டிருந்தார்.
பளு தூக்கும் வயதுக்கு அப்பால் அவர் குறித்த எடைகளை தூக்கியது பிரிட்டன் மற்றும் உலக அளவில் பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகின்றது.
குறித்த சாதனை தொடர்பில் சர்வதேச ஊடகமொன்று அவரிடம் வினவியபோது,
"எடைதூக்கும் போட்டியில் சாதனை படைத்ததில் பெருமகிழ்ச்சி, நான் பங்கெடுத்த போட்டிகளில் இதுவே மிகச் சிறந்தது, எடைதூக்குவது என் வாழ்க்கையில் முக்கிய அம்சங்களில் ஒன்றாக கருதுகிறேன், என்னால் முடிந்தவரை தொடர்ந்து எடை தூக்குவேன்." இவ்வாறு கூறியுள்ளார்.
