86 வயதில் கலக்கிய முதியவர் : தங்கப்பதக்கங்களை வென்று அசத்தல்
விளையாட்டிற்கு வயது ஒரு தடையே இல்லை என்பதை நிரூபித்துள்ளார் 86 வயதான முதியவர் ஒருவர்.
தமிழகம் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் சுப்பு என்ற 86 வயது முதியவர் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று நான்கு தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற
பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற வயது மூத்தோருக்கான 22வது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில் பங்கேற்ற இவர் நீளம் தாண்டுதல், ட்ரிபிள் ஜம்ப், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய விளையாட்டுகளில் 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் போட்டியிட்டு பதக்கம் வென்றுள்ளார்.
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற வயது மூத்தோருக்கான 22-ஆவது ஆசிய மாஸ்டர் தடகளப் போட்டியில், பல்வேறு பதக்கங்களை குவித்துள்ள நம்முடைய தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகளை இன்று நேரில் வாழ்த்தி மகிழ்ந்தோம்.
— Udhay (@Udhaystalin) November 17, 2023
ஆரோக்கியமான வாழ்வுக்கு விளையாட்டு அவசியம் என்பதையும், விளையாட்டில் சாதிக்க வயதேதும்… pic.twitter.com/CaJT7dkuGM
இந்த போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்ட சுப்பிரமணியம், அதன் பிரதிபலனாக பதக்கமும் வென்று அசத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |