இஸ்ரேல் இராணுவத்திற்கு பேரிழப்பு : ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் படை நடவடிக்கையின்போது இன்று செவ்வாய்க்கிழமை தாம் நடத்திய எதிர்த்தாக்குதலில் இஸ்ரேல் படையினருக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.
இதன்படி இன்று நடத்தப்பட்ட தாகுதலில் இஸ்ரேல் இராணுவத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் 22 டாங்கிகள் பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ சேதமடைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் படைக்கு ஏற்பட்ட இழப்பு
எனினும் தமக்கு ஏற்பட்ட இழப்பு விபரத்தை இஸ்ரேல் இராணுவம் வெளியிடவில்லை.
AL-QASSAM: The Al-Qassam Brigades announced that its fighters had managed, since Tuesday morning, to kill 9 Israeli soldiers and completely or partially destroy 22 tanks and vehicles.
— The Palestine Chronicle (@PalestineChron) November 14, 2023
FOLLOW OUR LIVE BLOG: https://t.co/ZtDvnogDEa pic.twitter.com/1sJBPsKVcA
இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்
இதனிடையே காசாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதலின் விளைவாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் காயமடைந்த இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
ISRAELI AMBULANCE: An Israeli was seriously injured in Tel Aviv as a result of rockets from Gaza.
— The Palestine Chronicle (@PalestineChron) November 14, 2023
FOLLOW OUR LIVE BLOG: https://t.co/ZtDvnogDEa pic.twitter.com/hgPFtuGkiY
இதேவேளை இஸ்ரேல் இராணுவம் கான் யூனுஸ் பகுதியில் நடத்திய தாக்குதலில் 13 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.