யாழில் இடம்பெற்ற போதை விருந்து : வன்மையாக கண்டித்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி!
யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழர் தாயகத்தின் கலாசாரங்களை சீர்கெடுக்கும் வகையில் இவ்வாறான விருந்துகள் தென்னிலங்கை அமைப்புக்களால் நடத்தப்படுவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே, அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்து வெளியிட்ட சுகாஷ், குறித்த களியாட்டத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
போதை விருந்து
கொழும்பை தளமாக கொண்டு செயற்படும் சமூக ஊடக அமைப்பினால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் அண்மையில் இரகசியமாக போதை விருந்து நடத்தப்பட்டிருந்தது.
இந்த விருந்தில் சுமார் 54 தனி நபர்களும், 80 இளம் ஜோடிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சமூக சீர்கேடான இந்த செயற்பாடு குறித்த உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணத்திலுள்ள குடிசார் அமைப்புகள் காவல்துறையினரிடம் கோரியுள்ளனர்.
#யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட #போதை விருந்தையும் களியாட்டத்தையும் (வெறியாட்டம்) ஒருபோதும் ஏற்கமுடியாது!
— Kanagaratnam Sugash (@Sugashkanu) November 14, 2023
எதிர்காலத்தில் இத்தகைய #போதை #வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டிக் குறித்த போதை மையங்களை #முற்றுகையிட வேண்டி ஏற்படலாம்! pic.twitter.com/yux1gny4QM
எச்சரிப்பு
இந்த பின்னணியில், எதிர்காலத்தில் இத்தகைய போதை வெறியாட்டங்கள் தமிழர் தாயகத்தில் தொடர்ந்தால், மக்களைத் திரட்டி குறித்த போதை மையங்களை முற்றுகையிட வேண்டி ஏற்படலாம் என சுகாஷ் எச்சரித்துள்ளார்.