சர்வதேச தரப்பினரை சந்தித்த அலி சப்ரி : இலங்கையின் நிலை தொடர்பிலும் பேச்சு (படங்கள்)
கொரியா குடியரசின் பூசன் பெருநகரத்தின் முதல் பார்க் ஹியோங் ஜூனை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று சந்தித்துள்ளார்.
இதன் போது, கொரியா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் கொரியாவுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை விரிவுபடுத்துவது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெற்றதாக அலி சப்ரி தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
It was a pleasure to meet with Hon. Park Heong Joon, Mayor of Busan Metropolitan of the Republic of #Korea today. The discussion focused on the wide range of areas of Sri Lanka-South Korea cooperation, and we agreed to further strengthen our relationship @MOFAkr_eng @MFA_SriLanka pic.twitter.com/v2116VaTJv
— M U M Ali Sabry (@alisabrypc) November 14, 2023
ஸ்வீடன் தூதுவர்
இதேவேளை, இலங்கைக்கான ஸ்வீடன் தூதுவர் மார்கஸ் பீட்டர்சனையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் இன்று சந்தித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கைகளை வலுப்படுத்துவது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
Had the pleasure of meeting Honorary Consul for Sri Lanka in Gothenburg, #Sweden Marcus Pettersson this morning at the Ministry of Foreign Affairs. We discussed further strengthening economic cooperation between the two countries @MFA_SriLanka pic.twitter.com/mlU1FT6rJu
— M U M Ali Sabry (@alisabrypc) November 14, 2023