ஷிரான் பாஸிக்கிற்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு!
முக்கியப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என தெரிவிக்கப்படும் ஷிரான் பாஸிக்கை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் (CCIB) மேலும் 90 நாள் தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்றுள்ளது.
ஷிரான் பாஸிக், 2026 மார்ச் மாதம் துபாயில் கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.
ஆரம்பத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பின்னர் CCIB யிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடத்தல் வலையமைப்பு
கடத்தல் வலையமைப்பு இதையடுத்து தனது கைத்தொலைபேசியில் இருந்த ஈரானின் ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல் காணொளிகள் காரணமாக துபாய் காவல்துறையினர் தன்னை கைது செய்ததாக அவர் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுடனான தொடர்புகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |