இந்த ஆண்டில் மாத்திரம் 90 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்
இந்த ஆண்டில் மாத்திரம் இதுவரை இடம்பெற்ற 90 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், 49 பேர் காயமடைந்ததாக காவல்துறை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, மிட்டியகொடவின் மலவண்ண பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து மூன்று குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபர்
சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்படி மிட்டியகொடவின் மலவண்ண பகுதியில் நேற்று மதியம் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்த வந்த சந்தேக நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தொடு, துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட T 56 துப்பாக்கியும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
