அரசாங்கத்தை விரட்ட 96 வீதமான இலங்கையர்கள் ஆதரவு
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lankan political crisis
By Vanan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அவர்கள் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என இலங்கையில் உள்ள 96 வீதமான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
கொழும்பை மையமாகக் கொண்ட முன்னணி ஆங்கில ஊடகமொன்று மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அத்துடன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நிபுணர்களை உள்ளடக்கிய அனைத்துக் கட்சி அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என பெரும்பாலான மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் அரச தலைவரோ, பிரதமரோ பதவி விலக வேண்டிய அவசியமில்லை என 2.1 வீதமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1.2 வீதமானவர்கள், எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதற்கில்லை எனப் பதில் அளித்துள்ளனர்.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்