மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
ருவன்வெல்ல பகுதியில் மின்னல் தாக்கியதில் 12 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேலும் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவன்வெல்ல - மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற குழுவினர் நேற்று (15) மாலை இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவன் உயிரிழப்பு
மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவன் ருவன்வெல்ல - கோனகல பிரதேசத்தைச் சேர்ந்தவரெனவும், காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி