கிணற்றில் விழுந்து 12 வயது பிக்கு உயிரிழப்பு!
By Sathangani
மீகவத்தை, நாரங்வல பிரதேசத்தில் அமைந்துள்ள பிரிவேனா ஒன்றில் இருந்த 12 வயது பிக்கு ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீகவத்தை காவல்துறையினருக்கு நேற்று (21) கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கிணற்றில் விழுந்து

பிரிவெனாவில் பிக்கு இல்லாததனால், தேடிய போது கிணற்றில் விழுந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அவர் மீட்கப்பட்டுள்ளார்.
கிணற்றில் இருந்து மீட்கப்படும் போதே அவர் உயிரிழந்திருந்தாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.