யாழில் கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Accident
By Kajinthan
யாழில் கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (01-05-2026) இடம்பெற்றுள்ளது.
காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கறிவேப்பிலை பறிப்பதற்குச் சென்று மரத்தில் ஏறியபோது தவறி கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.
இதன்போது வீதியால் சென்றவர்கள் அவரது மனைவிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |