தொடருந்துடன் மோதி 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
Colombo
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
உயிரிழப்பு
பாதுகாப்பற்ற தொடருந்து கடவையில் தொடருந்துடன் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
காலி - ரத்கம காவல் பிரிவுக்குட்பட்ட விஜயரத்ன மாவத்தைப் பகுதியில் இன்று (04.10.2022) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலியில் இருந்து அம்பலாங்கொடை நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதுண்ட இளைஞர் பலத்த காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
22 வயதுடைய இளைஞர்
கம்மத்தேகொட - ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ரத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்