அநுர அரசின் சதியொன்று அம்பலம்: கறுப்புக்கொடி போராட்டத்துக்கு கஜேந்திரன் அழைப்பு
Jaffna
Sri Lankan political crisis
Selvarajah Kajendren
By Shalini Balachandran
யாழில் (Jaffna) பாரிய போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த விடயத்தை கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “எதிர்வரும் 23 ஆம் திகதி அதாவது யூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒருநாள்.
இந்நாளின் வரலாற்றை மழுங்கடிக்க அநுர அரசு சதித் திட்டம் ஒன்றை மிக சாதுரியமாக நகர்த்த முயற்சிக்கின்றது.
இந்தநிலையில், அநுர அரசின் எடுபிடிகளின் முயற்சிக்கு எமது மக்கள் உடன் போகக்கூடாது.
அன்றைய நாளை கறைபடிந்த நாளாக நாம் அனைவரும் கறுப்புக்கொடி கட்டி துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்