நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த 22 வயது இளைஞன்..!
Sri Lanka Police
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
மஹவெல ரூனெயளர் ரஜ்ஜம்மத பிரதேசத்தில் உள்ள சுது கங்கையில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பாமுல்ல - கிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனை மற்றும் மரணத்திற்கு பின்னரான விசாரணைகளை அடுத்து உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
