யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு பரிதாபமாக உயிரிழப்பு!
Cold Fever
Jaffna
Jaffna Teaching Hospital
By Kajinthan
யாழில் பிறந்து 25 நாட்களேயான ஆண் சிசு ஒன்று இன்றையதினம் (21)பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆதித்தியன் கிருஷாளினி என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குழந்தை
குறித்த குழந்தைக்கு கடந்த முதலாம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் சிகிச்சைக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
மூளையில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 17
2ம் ஆண்டு நினைவஞ்சலி