27 வயதுடைய இளைஞன் அடித்து படுகொலை! தொடரும் விசாரணை
Colombo
Sri Lanka Police Investigation
By Dhilak
வெலிக்கடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட நாவல பகுதியில் 27 வயது இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
ராஜகிரியவைச் சேர்ந்த அந்த இளைஞருக்கும் ஒரு குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.
தகராறு முற்றியதால், இந்த கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இந்நிலைியல், கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் களுபோவில வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வெலிக்கடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்