நாமலுக்கு ஏற்பட்ட கெட்ட சகுனம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவரது பெயர் அறிவிக்கப்பட்டது.
தடைப்பட்ட நேரடி ஒளிபரப்பு
இது தொடர்பான நிகழ்வை கட்சித் தலைமையகம் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்த போது, வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டதும் நேரடி ஒளிபரப்பு தடைப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
குவியும் வாழ்த்துகள்
இதேவேளை மொட்டுவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்சியின் அமைச்சர்களிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் குவிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதியுடன் இருக்கும் மொட்டு பிரதமர் கூட நாமல் ராஜபக்சவை அழைத்து வாழ்த்து தெரிவித்தமை விசேட நிகழ்வாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |