வெற்றிலைக் கொடியை வீட்டில் வளர்க்கலாமா...எந்த திசையில் வைக்க வேண்டும்....
வெற்றிலைக் கொடியை வீட்டில் வைத்து வளர்க்க முடியுமா, என்ற சந்தேகம் அன்று தொட்டு இன்று வரை நம்மில் பலருக்கு இருக்கின்றது.
துளசிச் செடியை எப்படி வீட்டில் வைத்து வளர்க்கலாமோ அதேபோன்று வெற்றிலைக் கொடியையும் வீட்டில் வைத்து வளர்க்கலாம். வெற்றிலையும் மகாலட்சுமிக்கு சொந்தமான ஒரு பொருள்தான்.
இந்த வெற்றிலைக்கொடியை வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்த்தால் செல்வம் பெருகும் என்ற கேள்வி நமக்குள் பலருக்கு இருக்கின்றது.
வடகிழக்கு மூலையில் வைத்தல்
வெற்றிலை கொடியை உங்களுடைய வீட்டின் ஈசான மூலை என்று சொல்லப்படும் வடகிழக்கு மூலையில் வைப்பது மிக மிக சிறப்பானது.
வடக்கிழக்கு மூலையில் இடம் இருந்தால் பூமியிலேயே இந்த வெற்றிலை கொடியை பதியம் போடலாம். இடமில்லாதவர்கள் ஒரு சிறிய தொட்டியை ஈசான மூலையில் வைத்துவிட்டு, அந்த தொட்டியில் வெற்றிலை கொடியை வளர்க்கலாம்.
ஈசான மூலையில் செடி வைப்பதற்கு உங்களுடைய வீட்டில் வழியே இல்லை எனும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு, இந்த மூன்று திசைகளில் ஏதாவது ஒரு திசையை தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் இந்த வெற்றிலை கொடியை வளர்க்கலாம்.
தழைத்து வளரும்
அத்துடன் பொதுவாகவே வெற்றிலைக் கொடி எல்லோர் வீட்டிலும் வளர்ந்து விடாது. ஒரு சில பேர் வீட்டில் வெற்றிலைக் கொடி பச்சை பச்சையாக தழைத்து வளர்ந்து கொடி படரும்.
சில பேர் வீடுகளில் வெற்றிலை கொடியை வைத்த ஒரு சில நாட்களிலேயே உடனே பட்டுப்போகும். காரணம் அந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் இல்லாததுதான் காரணம்.
நேர்மறை ஆற்றல் எந்த இடத்தில் நிறைந்து இருக்கின்றதோ அந்த இடத்தில் செடி கொடிகள் எல்லாம் செழிப்பாக வளரும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |