ரஷ்யாவிற்கு பேரடி - தாக்கியழிக்கப்பட்ட ட்ரோன்கள்
உக்ரைன் தலைநகரை குறிவைத்து தற்போது நாளாந்தம் ரஷ்யா ஏவுகணைகளாலும் ட்ரோன்கள் மூலமும் தாக்குதல்களை நடாத்தி வருகின்றது.
இவ்வாறு கீவ்வை தாக்கிய சுமார் 20 ரஷ்ய ட்ரோன்களில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அழித்துள்ளதாக அந்த நாட்டின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உக்ரைனிய தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கியமான உள்கட்டமைப்புகள் மீது திங்கட்கிழமை ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அழிக்கப்பட்ட ட்ரோன்கள்
Winter has come and it's minus 8 outside. Due to #Russian drone attacks on critical infrastructure, there is no light, and accordingly, heating and water in 50% of Kyiv citizens. #RussiaIsATerroristState #StopRussia https://t.co/2SZk0VLxqW pic.twitter.com/kFZq9wQI7N
— UkraineWorld (@ukraine_world) December 19, 2022
ரஷ்யா திங்கட்கிழமை அதிகாலை உக்ரைன் முழுவதும் நடத்திய தாக்குதல்களில் ஈரானில் தயாரிக்கப்பட்ட சுமார் 35 ஷாஹெட் ட்ரோன்களை பயன்படுத்தியது, அவற்றில் 30-ஐ அழித்ததாக உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
மேலும் தலைநகர் மீதான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 20 ரஷ்ய ட்ரோன்களில் 15-ஐ உக்ரைனிய வான் பாதுகாப்பு படை அழித்ததாகவும், அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இரவு நேர தாக்குதல்கள்
கீவ்வின் ஆளுநர் Oleksiy Kuleba வழங்கிய தகவலில், உக்ரைனிய தலைநகர், ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது, அதிலும் இரவு நேரங்களில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களால் உள்கட்டமைப்பு மற்றும் தனியார் வீடுகள் சேதமடைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.