நைஜீரியாவில் 300 பேருடன் பயணித்த படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்(Nigeria), 300 பேருடன் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்றிரவு(02.10.2024) இடம்பெற்றுள்ளது.
நைஜீரியாவின் வடக்கு பகுதியில், அமைந்துள்ளது நைஜர் மாகாணத்தில் ஆண்டு தோறும் மவுலுத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
விபத்துச் சம்பவம்
அதன்படி, இந்த ஆண்டிற்கான மவுலுத் திருவிழாவை கொண்டாடிவிட்டு, முண்டியிலிருந்து கபாஜிபோவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளை, 300 பேருடன் பயணித்த மரப்படகு நேற்றிரவு(02) திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் அந்நாட்டு தலைவர் ஜிப்ரில் அப்துல்லாஹி முரேகி,
“நைஜர் மாகாணத்தில் நடந்த திருவிழாவில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 300 பயணிகளை ஏற்றிச்சென்ற மரப்படகு, நேற்று இரவு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கியதில் 60 பேர் உயிரிழந்ததுடன் அவர்களில் 160 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், மீட்பு பணிகள் இன்றும் தொடர்கிறது” என அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |