பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு..!
Sri Lanka
Sri Lankan Peoples
Death
By Kiruththikan
கஹட்டகஸ்திகிலிய நெகுடவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணை
விபத்தின் போது பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி