நுவரெலியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயது சிறுவன் உயிரிழப்பு!
Sri Lanka Police
Nuwara Eliya
By Sathangani
நுவரெலியா - பம்பரகலையில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 16 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குளவிக்கொட்டுக்கு இலக்காகிய மேலும் 3 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பம்பரகலை பகுதியில் நேற்று (20) விறகு சேகரிப்பதற்காக சென்ற போது அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
16 வயது சிறுவன்

பின்னர் குறித்த நான்கு பேரும் சிகிச்சைகளுக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நுவரெலியா பம்பரகலையை சேர்ந்த 16 வயதுடைய சிறுவனே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (21) நுவரெலிய பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.