தேர்தலை இலக்காக வைத்து அமைச்சரவையில் வருகிறது மாற்றம்
அரசாங்கத்தின் நம்பகமான தகவல்களின்படி, அமைச்சரவையில் அடுத்த மாதம் மாற்றம் செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இந்தமாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
மொட்டுவின் முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சு பதவி
இந்த மாற்றத்தில் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கும் அந்த வட்டாரங்கள், சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவிகளுக்கான உறுப்பினர்களின் பட்டியல் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர் பதவிகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தன.
தனியாக உள்ள அரச நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ்
தனியாக உள்ள அரச நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணையை பெற்று மக்களுக்கு சற்று நிவாரணம் வழங்கும் அதேவேளை அமைச்சரவையில் சில மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |