உள்ளாடைக்குள் வெடிபொருட்களை கடத்திச் சென்ற பெண் கைது
இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் தனது உள்ளாடைக்குள் வெடிபொருட்களை மறைத்து கொண்டு சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொட்டாவெஹர காவல்துறையினர் தெரிவித்தனர்.
கண்டி தலத்துய பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சோதனை
சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட 165 கிராம் கறுப்பு துப்பாக்கி பவுடர், 605 கிராம் அமோனியா வெடிபொருட்கள், 2 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 2 10 அடி சேவீஸ் கயிறுகள் மற்றும் 20 புகை துளிகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (19) கொட்டாவெஹர காவல்துறையினர் யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை இலங்கை போக்குவரத்து சபை பேருந்தை சோதனையிட்டனர்.
பெண்ணின் சந்தேகத்திற்குரிய நடத்தை
இதன்போது குறித்த பெண்ணின் சந்தேகத்திற்குரிய நடத்தையின் அடிப்படையில், மேலதிக சோதனையின் போது, அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேற்படி வெடிபொருட்களை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |