யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டார் கனேடிய பிரஜை
Sri Lanka Police
Jaffna
Canada
By Sumithiran
யாழ்ப்பாணம் அனலைதீவில் கனேடிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனலைதீவு வைத்தியசாலை ஒன்றில் கடமையில் இருந்த பெண் வைத்தியருடன் முறை தவறி நடந்ததுடன் வைத்தியசாலை தளபாடங்களிற்கும் சேதம் விளைவித்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிசிரிவி காட்சிகள் கையளிப்பு
செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு காவல்துறையினருடன் வைத்தியசாலைக்கு சென்ற அவர் இவ்வாறு மோசமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் ஊர்காவற்றுறை காவல்துறைக்கு முறைப்பாடு அளித்ததுடன் ஆதாரமாக வைத்தியசாலை சிசிரிவி காட்சிகளையும் கையளித்தது.
காவல்துறை மீது நடவடிக்கை இல்லை
இதன் அடிப்படையில் கனேடிய பிரஜை கைது செய்யப்பட்டதுடன் அவருடன் சென்றதாக கூறப்படும் இரண்டு காவல்துறையினர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவருகிறது.
