செய்தி சேகரிக்கச் சென்ற மட்டு. ஊடகவியலாளர் மீது வழக்கு தாக்கல் (காணொளி)
பண்ணையாளர்களினால் கடந்த (8)ஆம் திகதி செங்கலடிக்கு வருகை தந்த அதிபருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் செய்தி அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்களான சசி புண்ணியமூர்த்தி, பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகிய இருவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இருவரிடமும் மட்டக்களப்பு காவல்துறை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்து நீதிமன்ற முறி பத்திரத்திலும் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர்.
வாக்குமூலம் பெற்ற காவல்துறை அதிகாரி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாக சந்தேகப்படுவதாகவும் பிறந்ததிலிருந்து, தாய் தந்தையின் விபரம், சகோதரத்தின் விபரம் குடும்பத்தின் விபரம் படித்த படிப்புகளின் விபரம் உட்பட சகல விபரங்களையும் வாக்குமூலம் பதிவு செய்து எடுத்துள்ளனர்.
ஊடக சுதந்திரத்தை
ஆர்ப்பாட்டத்தில் வந்து என்ன செய்தீர்கள்? எவ்வளவு நேரம் அங்கு இருந்தீர்கள்? ஆர்ப்பாட்டத்துக்கு சென்று இருந்தீர்களா? அங்கு என்ன செய்தீர்கள்? ஆர்ப்பாட்டத்தின் போது ஏதும் பிரச்சினை நடந்ததா? ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையினர் இருந்தார்களா? ஆர்ப்பாட்டத்தின்போது வாகனங்கள் பாதையால் சென்றதா? ஆர்ப்பாட்ட இடத்தைவிட்டு எத்தனை மணிக்கு சென்றீர்கள்? போன்ற கேள்விகள் இவர்களிடம் கேட்கப்பட்டுள்ளன.
ஒரு ஊடகவியலாளராக நாட்டில் நடக்கும் சம்பவங்களை செய்தி அறிக்கையிட செல்ல முடியாதா? இதற்கு காவல்துறையில் அனுமதி எடுக்க வேண்டுமா? ஊடக சுதந்திரத்தை நசுக்கும் நடவடிக்கையில் இலங்கை காவல்துறை தற்போது முன்னெடுத்து வருகின்றது என ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்திற்கு பொய்யான தகவல்களை வழங்கி ஊடகவியலாளர்கள் மீது வழக்கு போடும் அளவுக்கு நாட்டின் ஊடக சுதந்திரம் இருக்கின்றது.
இதன் அடிப்படையில் எதிர்வரும் 17ஆம் திகதி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
