நயினை நாகபூசணியையும் விட்டுவைக்காத சீன தூதுவர்
Jaffna
Sri Lanka
China
By Jaso
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்த இலங்கைக்கான சீன தூதுவர் கி ஸென் ஹொங் தலைமையிலான குழுவினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதன்போது சீன தூதுவர் கி ஸென் ஹொங் சைவ சமய முறைப்படி வேட்டி அணிந்திருந்தார்.
சிவில் சமூகத்தினர் புத்திஜீவிகள் வர்த்தக சமூக பிரதிநிதிகளை
நயினாதீவுக்கு விஜயம் செய்த சீன தூதுக்குழு சீன அரசின் உலர் உணவுப் பொதிகளையும் மக்களுக்கு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவில் சமூகத்தினர் புத்திஜீவிகள் வர்த்தக சமூக பிரதிநிதிகளையும் சீன தூதுக்குழு யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியது.
இது தொடர்பிலான புகைப்படங்களை இலங்கைக்கான சீன தூதரகம் தமது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி