கோடிக்கணக்கான போதைப்பொருளை கடத்தியவர் சிக்கினார்
மோட்டார் சைக்கிளில் கடத்திச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகக் கூறப்படும் பணத் தொகையுடன் ஒருவர் வத்தளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபருடன் 1 கிலோ ஐஸ் போதைப்பொருள், இலத்திரனியல் தராசு ஒரு தொகை பணம், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக பாரியளவில் ஐஸ் போதைப்பொருளை விநியோகித்து வரும் சந்தேகநபர் தொடர்பில் விசேட அதிரடிப்படை கொனஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஜே.ஆர். சேனாதீரவின் வழிகாட்டலின் பேரில், உதவி காவல்துறை அத்தியட்சகர் சிறப்பு அதிரடிப்படை கொனஹேன முகாமின் பொறுப்பதிகாரி (சிறப்பு நடவடிக்கைகள்) வட்டேகெதரவின் மேற்பார்வையின் கீழ், காவல்துறை பரிசோதகர் எஸ்.டி.பி.என். தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்தது.
