யாழ் - வடமராட்சியில் தடம்புரண்ட கனரக வாகனம்!
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று தடம்புரண்டு விபத்துக்ககுள்ளாகியுள்ளது.
யாழ் - பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி இன்று (05) காலை குறித்த வாகனம் தடம்புரண்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”கற்கோவளம் பகுதியிலிருந்து வீதி புனரமைப்பு பணிக்கு பயன்படுதப்பட்ட ரோளர் வாகனத்தைத் ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனமே புறாப்பொறுக்கி பகுதியில் இவ்வாறு தடம்புரண்டுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
முன்னால் துவிச்சக்கர வண்டியொன்றில் சென்றவர் கட்டுப்பாட்டை இழந்து குறித்த கனரக வாகனத்துடன் விபத்து ஏற்படவிருந்த நிலையில் அதனைத் தடுக்க முற்பட்ட வேளையே குறித்த வாகனம் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
