ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டவுள்ள கோடிக்கணக்கான கட்டணம்

United States of America Iran Iran-Israel War Strait of Hormuz
By Jaso Apr 08, 2026 12:50 PM GMT
Report

 அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தில், ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணமாக ரூ. 18.5 கோடி வசூலிக்கப்படும் என்று ஈரான் நிபந்தனை விதித்துள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 40 நாள்களுக்கு மேலாக நீடித்து வந்த போர், பாகிஸ்தான் மத்தியஸ்தத்தின்பேரில் இரு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானிடம் இருந்து பெறப்பட்ட 10 அம்ச முன்மொழிவுகளில் அனைத்தும் கிட்டத்தட்ட ஒப்புக்கொள்ளப்படுவதாகவும், ஒப்பந்தத்தை இறுதிசெய்ய இரு வாரங்கள் கால அவகாசம் ஆகும் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஈரான் விதித்துள்ள நிபந்தனைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் சரக்கு கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பதாகும்.

அமெரிக்காவிற்கு படுதோல்வி : ரஷ்யா பகிரங்க அறிவிப்பு

அமெரிக்காவிற்கு படுதோல்வி : ரஷ்யா பகிரங்க அறிவிப்பு

சரக்கு கப்பல்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்  கட்டணம்

34 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த நீரிணை வழியாக, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டவுள்ள கோடிக்கணக்கான கட்டணம் | A Fee Ship To Cross The Strait Of Hormuz

இந்த நிலையில், ஹோர்முஸ் வழியாக செல்லும் சரக்கு கப்பல்களுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பின்படி ரூ. 18.5 கோடி) கட்டணம் வசூலிக்கப்படும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

போர்நிறுத்த வெற்றி...! ட்ரம்ப்புக்கும் தெஹ்ரானுக்கும் இடையே அடுத்த போட்டி

போர்நிறுத்த வெற்றி...! ட்ரம்ப்புக்கும் தெஹ்ரானுக்கும் இடையே அடுத்த போட்டி

போரால் பாதிக்கப்பட்ட உள்கட்டமைப்பை சீர்செய்யவுள்ள ஈரான்

ஓமன் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பிராந்திய எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ளதால், சுங்கக் கட்டணத்தை ஓமானுடன் பகிர்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டவுள்ள கோடிக்கணக்கான கட்டணம் | A Fee Ship To Cross The Strait Of Hormuz

இந்த கட்டணம் மூலம் போரால் பாதிக்கப்பட்ட ஈரானின் உள்கட்டமைப்பை சரிசெய்யப் போகிறோம் எனவும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் தொடர்பாக வருகின்ற வெள்ளிக்கிழமை இஸ்லாமாபாத்தில் அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன. அப்போது, ஹோர்முஸ் நீரிணை சுங்கக் கட்டண விவகாரம் பற்றி விரிவாக விவாதிக்கப்படவுள்ளன.

சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை 

போர் காரணமாக இந்த நீரிணையை ஈரான் மூடியதால், சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நீரிணையை திறக்காவிட்டால் புதன்கிழமை இரவு ஈரானின் நாகரீகமே இல்லாத வகையில் அழிவைச் சந்திக்கும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு விதிக்கப்பட்டவுள்ள கோடிக்கணக்கான கட்டணம் | A Fee Ship To Cross The Strait Of Hormuz

இதையடுத்து, இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக ஈரானும் அமெரிக்காவும் அறிவித்துள்ளன. ஹோர்முஸ் நீரிணையை இரு வாரங்கள் திறக்க ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. 

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முன்திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை

ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முன்திறக்கப்படவுள்ள ஹோர்முஸ் நீரிணை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016