போர்நிறுத்த வெற்றி...! ட்ரம்ப்புக்கும் தெஹ்ரானுக்கும் இடையே அடுத்த போட்டி

United States of America Israel Iran Middle East World
By Shalini Balachandran Apr 08, 2026 12:10 PM GMT
Report

மோடிமஸ்தான் வித்தை என்ற சொல்லாடல் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதோ கீரியும் பாம்பும் மோதப்போவதைப் பாருங்கள் எனப் பார்வையாளர்களுக்குப் பரபரப்பை உருவாக்கும் மோடிமஸ்தான், இறுதிவரை தன்னிடமுள்ள கீரியையும் பாம்பையும் சண்டைபோட விடமாட்டான். இப்போது மோடிமஸ்தான் கதையிலிருந்து உலக மஸ்தான் கதைக்குத் திரும்புங்கள்.

ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு ஒரு போர்நிறுத்தத்தைச் செய்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பைப் பொறுத்தவரை அவர் எதிராளிகளுக்கு என வைத்திருக்கக்கூடிய ஒரு குணாதிசயம் முக்கியமானது. அதாவது, தான் எப்போது ? எந்த நேரத்தில் எதனைச் செய்வேன் என்பதை யாரும் கணிக்கமுடியாத வகையில் தன்னிடம் ஒரு தன்மை உள்ளது என்பதை எதிரிகளை நம்பவைத்துவிடும் குணாதிசயம் இது. இதன் மூலம் எதிரிகளை இறுதியில் தடுக்கலாம் என்பது அவரது ஒரு கோட்பாடு.

ஆனால், மறுபுறத்தே அவரது இந்த குணாதிசயம் தான் அவருக்கு ரக்கோ (TACO) என்ற குறியீட்டுக்குரிய (Trump Always Chickens Out) என்ற சிலாகிப்பை அதாவது ட்ரம்ப் எப்போதும் கோழைத்தனமாகப் பின்வாங்கும் ஒரு நபர் என்ற அடையாளத்தை வழங்கியது. பொதுவாகவே தற்பெருமை பேசுபவர்கள் ஆக்ரோஷமாக மோதுவது போலப் பரபரப்புகளை உருவாக்கி விளிம்பு நிலை வரை சென்று இறுதியில் பின்வாங்கிவிடுவார்கள். இது அவர்களின் ஒரு தந்திரம்.

எதிராளியுடனான மோதல் சூழலை விளிம்பிற்குத் தள்ளும் இந்தச் சூழ்ச்சி, ஒருகட்டத்தில் நன்மை பயக்காது என்பது தெரிந்தவுடன் எதிராளியைப் பின்வாங்கக் கட்டாயப்படுத்துவதன் மூலம் வெற்றி பெறுகிறது. இப்போது ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தம் என்ற விடயத்திலும் இதுதான் நடந்தது.

இது ஒரு கேம் ஆஃப் சிக்கன் (Game of Chicken) என வர்ணிக்கப்படும் கோழிச்சண்டை விளையாட்டுக்கு ஒப்பானது. ஒரு பாலம் ஒன்றின் மீது இரண்டு வாகனங்களின் சாரதிகள் தமது வாகனத்தை ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளும் நேர்பாதையில் மிகவேகமாகச் செலுத்தி இந்த மயிர்க்கூச்செறியும் விளையாட்டில் ஈடுபடுவார்கள்.

 இந்த ஆட்டத்தில் இரண்டு வாகனங்களும் மிகவேகமாக நேர்நேராகச் சீறிச்செல்லும். ஒரு கட்டத்தில் இரண்டு வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொள்ளப்போவதான ஒரு நிலை வரும்போது, அதில் ஒரு வாகனத்தின் சாரதி தனது மரணம் குறித்த அச்சத்தால் தனது வாகனத்தைச் சடுதியாகத் திருப்பி மோதலைத் தவிர்ப்பார். ஒருவர் இவ்வாறு செய்யாமல் விட்டால் அந்த மோதலில் இருவருமே பலியாக நேரிடும். இவ்வாறான அபாயகர ஆட்டத்தில் தன்னையும் எதிரியையும் காப்பாற்ற அதாவது மோதலைத் தவிர்த்து வாகனத்தைத் திருப்பும் நபர், இந்த ஆட்டத்தில் கோழை என்ற அர்த்தத்துக்குரிய சிக்கன் அல்லது கோழி என்ற விளிப்பைப் பெறுவார். 

இந்த சிக்கன் என்ற சொல்லாடல் அரசறிவியலில் உள்ளது. ட்ரம்ப் இந்த சிக்கன் ஆட்டத்தைத் தனது முதலாவது பதவிக்காலத்தில் வட கொரியாவுக்கும் ஆப்கானுக்கும் நடத்தினார். வடகொரியாவை அழிப்பதாக 2017 இல் அச்சுறுத்தினார். அதேபோலப் பத்து நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானைப் பூமியிலிருந்து துடைத்தெறியப்போவதாகவும் சூளுரைத்தார்.

ஆனால், இவை இரண்டும் ஒருபோதும் நடக்கவில்லை. மாறாக வட கொரியாவின் அணுசக்தித் திட்டப் பேச்சுகளில் ட்ரம்ப் தோல்வியுற்றார். அதேபோல ஆப்கானிஸ்தானையும் அவரால் துடைத்தெறிய முடியவில்லை. இப்போது இந்த ஆட்டம் ஈரானைக் கற்காலத்திற்குக் கொண்டுசெல்லும் வகையில் அவரால் குண்டுகளை வீசமுடியாமல் செய்துள்ளது. இந்த நிலையில் ஈரானை மையப்படுத்திய அவர் கடைசி நிமிடத்தில் ஏற்படுத்திய இந்த போர்நிறுத்த ஒப்பந்தமும் ஒருவகையில் அவரை ரக்கோ ட்ரம்ப் ஆக்கிய நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது ஐபிசி தமிழின் செய்திவீச்சு...

  

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

ஈரானுக்கு எதிரான போரில் கசிந்த அமெரிக்க திட்டம்

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை...!

முல்லைத்தீவில்முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள்: தாக்கப்பட்ட ஐபிசி தமிழின் பிராந்திய செய்தியாளர்

முல்லைத்தீவில்முறைகேடாக பயன்படுத்தப்பட்ட அரச வாகனங்கள்: தாக்கப்பட்ட ஐபிசி தமிழின் பிராந்திய செய்தியாளர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016