திடீரென பரவிய தீ: எரிந்து சாம்பலாகிய மர ஆலை
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீ விபத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மரங்கள் சில எரிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி சம்பவமானது இன்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், பிரதேசவாசிகள் மற்றும் கல்முனை (Kalmunai) மாநகரசபையின் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்த தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதகவும் மற்றும் இதன் போது உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
