நண்பனை மண்வெட்டியால் தாக்கி கொன்ற நண்பன் - தமிழர் பகுதியில் சம்பவம்
தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வவுனியா, கல்மடு ஈஸ்வரபுரம் பகுதியில் இந்தக் கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியா கல்மடு ஈஸ்வரபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
போதையின் உச்சம் தலைக்கேறிய நிலையில்

நண்பர்கள் இருவர் மதுபானம் அருந்தியுள்ளனர். இதன்போது போதையின் உச்சம் தலைக்கேறிய நிலையில் பழைய தகராறு தொடர்பில் இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலை நடந்த இடத்தில்

கொலை நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டனர்.
கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவாகிய நிலையில் இன்று அதிகாலை ஈச்சங்குளம் காவல்துறையில் சரணடைந்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 52 நிமிடங்கள் முன்