இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மனிய பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Sexual harassment
By Sumithiran
இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மனிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் மசாஜ் நிலைய ஊழியர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹபராதுவ காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மசாஜ் செய்தவேளை பாலியல் தொல்லை

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஜேர்மானிய பெண் ஒருவர் உனவட்டுன மாட்டரம்பவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இன்றையதினம் (25) மசாஜ் செய்து கொள்வதற்காக வந்துள்ளார்.
மசாஜ் செய்து கொண்டிருந்த ஊழியர் , தனது பிறப்புறுப்பை விரல் நுனியால் தொட்டு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக 65 வயதுடைய ஜேர்மன் பெண் ஹபராதுவ காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேகநபர் கைது

அந்த முறைப்பாட்டுக்கு அமைய 45 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை காலி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி